உயர்ந்த பண்பு – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

High character – Today's news – Thenkachi Ko. Swaminathan

அடுத்தவர்கள் நிலத்தை நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் தேசங்கள் சண்டை போட்டுகொள்கின்றன. அப்படி ஒரு போர் நடந்த சமயம் பிரான்ஸ் வீரர்கள் ஜேர்மனியில் முகாம் இட்டிருந்தார்கள்.

அவர்கள் படையில் நிறையக் குதிரைகள் உண்டு. அதற்க்கு எல்லாம் ஆகாரம் தேவைப்பட்டது. புது இடம் என்ன செய்வது என்று யோசித்தார் படைத்தளபதி. ஒரு படை அதிகாரியைக் கூப்பிட்டார். குதிரைகளுக்குத் தேவையான புல்லைக் கொண்டுவருமாறு ஆணையிட்டார். உடனடியாக அவ் அதிகாரி தன்னிடமிருந்த படை வீரர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சென்றார். அங்கே மரங்கள் மட்டும்தான் இருந்தது. அந்த பகுதி ஒரு சிறிய பள்ளத்தாக்கு சுற்றிலும் குன்றுகள். சற்றுத் தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. எல்லோரும் அங்கே போனார்கள் அந்த அதிகாரி தன்னுடைய படை வீரர்களில் ஒருத்தனை அழைத்து அந்த வீட்டுக் கதவைத் தட்ட சொன்னார். தட்டியவுடன் குடிசையின் கதவு திறந்தது. வெள்ளைத் தாடியுடன் ஒரு வயதான தாத்தா வெளியே வந்தார்.

படைத்தலைவர் அவரைப் பார்த்து பெரியவரே எங்கள் குதிரைகளுக்கு புல் எங்கே கிடைக்கும் இடத்தைக் காட்டுங்கள் நாங்கள் களைகின்றோம் என்றார். சரி என்னோடு வாருங்கள் என்றார் அவர். பின் எல்லோரும் புறப்பட்டார்கள். அந்தத் தாத்தா அவர் பாட்டிற்கு காடு, மேடு எல்லாம் நடந்து போய்க்கொண்டிருந்தனர். வழியிலே ஒரு புல் நிலம் இருந்தது படைத்தலைவர் அந்த இடத்தைப் பார்த்ததும். இது போதும் இங்கே களையலாமே என்றார்.

இங்கே வேண்டாம் இன்னும் சற்றுத்தூரம் செல்வோம் என்றார் . சிறிது நேரம் பொறுத்துக்கொண்டு என் பின்னால் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டு போய்கொண்டிருந்தார் அந்தத் தாத்தா. படைவீரர்களும் சரி என்று சொல்லிகொண்டு அவர் பின் சென்றார்கள்.

அடுத்தபடியாகவும் புல்லைக் களைவதற்கு இரண்டு, மூன்று இடங்கள் அங்கேயும் புல் இருந்தது இருந்தாலும் அதுஎல்லாம் ன்று சொல்லிக்கொண்டு வேறு ஒரு புல் நிலத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். அங்கே ஒரு நிலத்தைக் காட்டி இதில் புல்லை வெட்டிகொள்ளுங்கள் என்றார் உடனே அந்தப் படைவீரர்கள் எல்லோரும் புல்லை களைந்து மூட்டை கட்டிகொண்டார்கள். அதன்பின் குதிரை மேலே ஏறி புறப்பட்டார்கள். அந்தச் சமயத்திலே அந்தப் படைத் தலைவர் இந்தத் தாத்தாவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

பெரியவரே! அநாவசியமாக எங்களை இவ்வளவு தூரம் கூட்டிகொண்டு வந்தீர்கள் அங்கேயே வரும் வழியிலே புல் நிலங்கள் நிறைய இருந்ததே அதிலேயே புல்லைக் களைந்திருக்கலாமே என்றார். அதற்க்கு அந்த பெரியவர், உண்மைதான் ஆனால் அந்த நிலம் என்னுடையது இல்லை. இதுதான் என்னுடைய நிலம் என்றார். பெரியவருடைய இந்தப் பண்பு அந்த அதிகாரியை ஆச்சரியப்ப டுத்தியது. (பிரான்ஸ் எழுத்தாளர் பெர்னார்தென் தெசென் பியர் என்பவர் எழுதிய ஒரு குட்டி கதை இது) இந்தப் பண்பு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது? அடுத்தவர் நிலத்தைக் காட்டி களைந்து கொண்டு போங்கள் என்று சொல்பவர்கள் தான் அதிகம் இன்று. ஒருத்தன் ஒரு குதிரை வைத்திருந்தான் அதை எந்நேரமும் வண்டியிலேயே வைத்திருந்தான்.

இரவு பகலாக அப்படியே நின்றுகொண்டிருக்கும். தரையிலேயே உறங்கவிடுவதில்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒருவர் சொன்னார். உனக்கு ஜீவகாருண்யமே கிடையாதா? எப்பொழுது பார்த்தாலும் வண்டியிலேயே பூட்டி நிறுத்தி வைத்துள்ளாயே அவிழ்த்துவிட்டால்தான் என்ன? என்றார். குதிரையை அவிட்டு விட்டால் பொத் என்று கிழே விழுந்துவிடும் சேர் என்றார். அதற்கு ஒரு ஆதார பலம் வேண்டும் என்றார். அதனால்தான் பூட்டி வைத்துள்ளேன் என்றார்.

High character – Today's news – Thenkachi Ko. Swaminathan