ஒரு ஊரில் குருவிகளும் புறாக்களும் மிகவும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் வாழ்ந்து வந்தன. சிட்டுக்குருவிகள் அளவில் சின்னதாக இருந்தாலும் புறாக்களுக்கு ஈடு கொடுத்து பறப்பதும், அவற்றுடன் சேர்ந்து சுற்றி திரிவதுமாக இருந்தது. புறாக்களும் குருவிகளும் ஒரு அழகான பெரிய மரத்தில் தங்கி இருந்தன. சில நாட்கள் அந்தப் பெரிய
கழித்து மரத்தை வெட்டுவதற்காக 2 நபர்கள் வந்தனர். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதைக் கண்டதும் புறாக்களும் குருவிகளும் நடுங்கின.
‘அடடா நாம் இருப் பதற்கு இடமில்லாமல் போய் விடும் போல் உள்ளதே. இவர்கள் இந்த மரத்தை வெட்ட அல்லவா வந்திருக்கிறார்கள். நல்ல நிழல் தரும், பழங்களையும் தரும் இந்த மரத்தை விட்டு எங்கு செல்வது?’ என்று வருந்தின. வீதியின் நடுவில் பெரிய மரமாக வளர்ந்து இருப்பதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அதனை வெட்டுவதற்கு வந்த இரண்டு நபர்களும் பேசிக்கொண்டதை புறாக்களும் குருவிகளும் கேட்டு வருந்தின.

வந்த நபர்கள் சிறிதும் தயவு தாட்சண்யம் பாராமல் மரத்தை வெட்ட ஆரம்பித்தனர். புறாக்களும் குருவிகளும் மரத்தை விட்டு வெளியேறி வேறொரு இடத்தைத் தேடி பறந்து கொண் டிருந்தன. அப்பொழுது வழியில் வயலில் இருந்து பறிக்கப்பட்ட நெற்களும் பயறுகளும் உலர்த்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண் டதும் அனைத்து பறவைகளும் அந்த இடத்தில் இறங்கி காயப் போட்ட நெற்களையும், பயறு களையும் தின்று தீர்த்து விட்டன. திரும்பி வந்த விவசாயி அங்கு போடப்பட்டிருந்தவை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தப் பறவைகளை நாம் எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டான்.
மறுநாள் வலை ஒன்றை தயார் செய்து கொண்டு வந்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு பறவைகள் வரும் வரை காத்திருந்தான். அடுத்த நாள் அங்கு வந்த புறாக்களும் குருவிகளும் தானியத்தைக் கண்டதும் உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத்தொடங்கின. அதன் கால்கள் வலைகளில் சிக்கிக்
கொண்டன. அதை மறைந்திருந்த பார்த்த விவசாயியோ ஓடி வந்து அத்தனை குருவிகளையும் புறாக்களையும் பிடிக்க முற்பட்டான். அவன் வருவதைக் கண்டதும் புறாக்களும் குருவிகளும் ஆபத்தை உணர்ந்து உயிர் மீதுள்ள ஆசையால் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தன. வலையையும் தூக்கிக் கொண்டு உயர பறந்து சென்றன. இதைக் கண்ட விவசாயி நெல்மணிகளுடன் பயறுகளையும் சாப்பிட்டதுடன் நில்லாமல் வலையையும் தூக்கிக் கொண்டு செல்கிறதே என்று புலம்பினான்.
பறக்கும் பொழுது புறாக்கள் குருவியை பார்த்து எங்களு டைய வலிமையால் தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு உள்ளீர்கள். நாங்கள் மட்டும் சிறகை வேகமாக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால் அவ்வளவுதான் நீங்கள் மாட்டியிருப்பீர்கள் என்றன.
குருவிகளுக்கு கோபம் வந்தது. நாங்களும் உங்களைப் போல் வேகமாக பறக்க கூடியவர்கள் தான். எங்களை ஒன்றும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று கொண்டு ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. இதனால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலையுடன் மாட்டிக் கொண்டன. இதைக் கண்ட விவசாயி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எங்கே தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளை இவை வசமாக என்னிடம் மாட்டிக் கொண்டன என்று கூறிக் கொண்டே அவற்றையெல்லாம் பிடித்து தனது கூடைக்குள் போட்டுக் கொண்டான். இத்தனை காலம் ஒற்றுமை யாக வாழ்ந்த புறாக்களும் பறவைகளும் ஒற்றுமை இழந்து சண்டை போட்டதால் மாட்டிக் கொண்டன.