மருமகள் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Daughter-in-law – Today’s news – Thenkachi Ko. Swaminathan

இப்போது எல்லா ஊர்களிலும் மாமியார் மருமகள் ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிந்து கொண்டு நல்லவிதமாகதான் இருக்கின்றனர் பல இடத்திலே! அதனாலே நான் இப்பொழுது சொல்லப்போகின்ற கதையைக் கேளுங்கள் இந்த காலத்தில் அவ்வளவு மோசமாக யாரு சார் நடந்து கொள்கின்றனர். என கேட்டு யாரும் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். இன்னொரு உண்மையும் சொல்லுகின்றேன் என்னுடைய பாதுகாப்புக்காக. இந்த கதையை நமக்கு எழுதி அனுப்பியிருக்கின்றதே கொஞ்ச நாளில் மருமகளாகவும் அதன்பின் மாமியாராகவும் ஆகப்போகும் ஒரு நேயர் தான்.

சரி இப்பொழுது கதைக்கு வருவோம். ஒரு சின்ன குழப்பம் அந்த வீட்டிலிலே மாமியார் ஆட்சி. அவர் வைத்ததுதான் சட்டம். பிள்ளையாண்டான் எப்படி என்றால் அம்மா சொல்வதையும் கேட்பாள் மனைவி சொல்வதையும் கேட்பான். நமக்கு ஏன் பிரச்சினை என்கின்ற விதம்! மருமகளிடம் குறை கண்டுபிடிப்பதில் அந்த மாமியாருக்கு ஒரு சுவாரஸ்யம்! சின்ன சின்ன விடயத்தில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்து கொண்டு இருந்தார்.

பொதுவாக எல்லோரும் எப்படி என்றால் ஏதாவது ஒரு காரணத்துக்காகதான் சண்டை போட்டிருப்பார்கள். அந்த அம்மா எப்படி என்றால் ஏதாவது ஒரு சண்டை போடுவதற்க்கு காரணத்தை தேடி கொண்டு இருப்பார். அப்படி ஒரு மனசு அந்த மருமகப் பெண் பாவம் பயந்து ஒவ்வொரு காரியமும் செய்துகொண்டு வந்தாள். இப்படியே பல வருடம் ஓடிவிட்டது அந்த மாமியாருக்கும் ரொம்ப வயதாகிவிட்டது.இருந்தாலும் அந்த பழைய சுபாவம் மட்டும் மாறவில்லை! திடீரென ஒரு நாள் பக்கவாதம் வந்து அந்த அம்மாவிற்கு ஒரு பக்கம் கை காலை இழுத்துக்கொண்டது. வாய் சுத்தமாக பேச முடியாமலே போய்விட்டது. சத்தம் மட்டும் வரும். ஒரு கை காலை அசைக்க முடியும் பேசுவதெல்லாம் சைகையால் மட்டும் தான்.

இப்படிப்பட்ட நிலைமையிலும் கூட அந்த பெண் தண்ணியோ பாலோ இவர்கள் வைத்தால் எதிரிலே கொண்டுவந்து வைத்தால் அதை வேண்டும் என்றே தட்டிவிட்டு வம்பு வளர்ப்பது.அதற்குப்பிறகு அந்த| பெண் தரையை சுத்தப்படுத்தும் போது,அதைப்பார்த்து ரசிப்பது இருந்தாலும் அந்தப்பெண் இதையெல்லாம் பெரிதுப்படுத்தாமல் ரொம்பப் பொறுமையாகத்தான் இருந்தாள்.

ஒரு நாள் வீட்டிலே வைத்திருந்த பாலை பூனை குடித்துவிட்டு ஓடிவிட்டது. வயதான காலத்தில் இந்த அம்மா இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என நினைத்து பக்கத்து வீட்டிலே போய் கொஞ்சம் | வாங்கிவிட்டு வந்து காய்ச்சி மாமியார் முன்னாடி கொண்டுவந்து வைத்தாள் அந்த பெண். வழக்கம் போல் அந்த அம்மா பாலை தட்டிவிட்டார்கள் இதை அந்த மருமகள் கவனித்துவிட்டாள்.

இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த அந்த மருமகளுக்கு இன்றைக்கு இதைப் பார்த்ததும் கோவம் வந்துவிட்டது. கதவிற்கு பக்கத்தில் சாத்தி வைத்திருந்த உலக்கையை எடுத்து மாமியார் தலையிலே போட அது தவறி கழுத்திலேயே பட அந்த அம்மா கழுத்தை பிடித்துக்கொண்டு ஆ. என்று கத்த இந்த பெண் ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் உலக்கையை எடுத்து மறுபடியும் கதவுப்பக்கம் சாத்தி வைத்துவிட்டு நடந்து போய்விட்டாள்.

இருந்தாலும் மனதிற்குள் லேசாக ஒரு பயம்.கணவன் வீட்டிற்கு வந்ததும் என்ன விடயம் என்று கேட்டால் எப்படி சமாளிக்கலாம்? அன்றைக்கு என்று பார்த்து ரொம்ப நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தான் கணவன், உடனே அந்த அம்மா புகார் பண்ண ஆரம்பித்தார். பேச்சு வராதே! அதனால் ஒரு பக்கத்து கையாலே சைகை காட்டினார். கதவுக்கு பக்கமாக இருந்த பக்கமாக கையை நீட்டிக்காட்டி அப்படியே அந்த கையை தன் கழுத்திற்கு பின்பக்கமாக சுத்தி காட்டி நாக்கை வெளியே காட்டினார்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை! என்ன சொல்கின்றார்கள் அம்மா என்று மனைவியிடம் கேட்டான் அதற்கு அந்த மருமகள் ரொம்ப புத்திசாலித்தனமாக என்னங்க உங்கள் அம்மா உங்களைப் பார்த்து ஏன் உலக்கை மாதிரி நிற்கின்றாய், சாகப்போகும் எனக்கு சங்கிலி எதற்கு? என் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை கழற்றி என் மருமகள் கழுத்தில் போடு என்று சொல்கிறார்கள் அப்படி என்றாள்.

ஓ அப்படியா விஷயம் என்று சொல்லி அம்மா கழுத்தில் இருந்த| சங்கிலியை எடுத்து மனைவி கழுத்தில் போட்டுவிட்டு அம்மா உங்கள் விருப்பப்படியே போட்டு விட்டேன் இனிமேலாவது நிம்மதியாக படுத்துத் தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
பார்த்தீர்களா கதையை அதனால் மாமியார்களே சைகை காட்டுவது என்றால் கூட இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்!

Daughter-in-law – Today’s news – Thenkachi Ko. Swaminathan